தமத்துஃ பிரகாரம் உம்ரா செய்த ஒருவர் துல் ஹிஜ்ஜஹ் மாதம் ஏதாவது ஒரு மீக்காத்துக்குச் சென்று இஹ்ராம் செய்து கொண்டால் ஹத்யு விழுந்துவிடும் என்றிருந்தால் فمن تمتع بالعمرة إلى الحج என்பதன் அர்த்தம் என்ன?

Question

தமத்துஃ பிரகாரம் உம்ரா செய்த ஒருவர் துல் ஹிஜ்ஜஹ் மாதம் ஏதாவது ஒரு மீக்காத்துக்குச் சென்று இஹ்ராம் செய்து கொண்டால் ஹத்யு விழுந்துவிடும் என்றிருந்தால் فمن تمتع بالعمرة إلى الحج என்பதன் அர்த்தம் என்ன?

Fatwa

பதில்: திருக்குர்ஆன் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தமத்துஃ என்ற பதத்தின் அர்த்தம் இன்பம் அடைதல், சுகமாக இருத்தல் என்பதாகும்.

தமத்துஃ முறையில் ஹஜ் செய்யக்கூடியவர்கள் ஹஜ், உம்ரா இரு அமல்களையும் ஒரு மீக்காத்துடன் போதுமாக்கி ஹஜ்ஜுக்காக வேறாக மீக்காத்துக்கு சென்று இஹ்ராம் கட்டாமல் உம்ராவுடைய மீக்காத்துடன் போதுமாக்கிக் கொள்வதாலும், உம்ராவுடைய அமல்களை முடித்து ஹஜ் செய்யும் காலம் வரும் வரை இஹ்ராமைக் களைந்துவிட்டு இஹ்ராம் அணிந்த நிலையில் செய்வதற்கு தடுக்கப்பட்ட விடயங்களைச் செய்வதன் மூலம் அவர்களது காரியங்கள் இலகுவாகி அவர்கள் இன்பம் அடைகின்றனர்.

அவ்வாறு இன்பம் அடைவதனாலேயே குற்றப்பரிகாரமாக தமு கொடுக்க வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட இரு விடயங்களில் முதமத்திஃ உம்ரா செய்துவிட்டு ஹஜ்ஜுக்காக மீண்டும் மீகாத்துக்குச் சென்று இஹ்ராம் அணிவதால் அவருக்குக் கிடைத்த இலகு இல்லாமல் போகின்றது என்பதனாலேயே தமு இல்லாமல் ஆகிவிடுகின்றது.

قَالَ الْعُلَمَاءُ قَوْله تَعَالَى (فمن تمتع بالعمرة) أَيْ بِسَبَبِ الْعُمْرَةِ لِأَنَّهُ إنَّمَا يَتَمَتَّعُ بِمَحْظُورَاتِ الْإِحْرَامِ بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ بِسَبَبِ الْعُمْرَةِ قَالُوا وَالتَّمَتُّعُ هُنَا التَّلَذُّذُ وَالِانْتِفَاعُ يُقَالُ تَمَتَّعَ بِهِ أَيْ أَصَابَ مِنْهُ وَتَلَذَّذَ بِهِ وَالْمَتَاعُ كُلُّ شئ يُنْتَفَعُ بِهِ وَاَللَّهُ أَعْلَمُ (فَصْلٌ فِي الِاسْتِئْجَارِ لِلْحَجِّ – كتاب الحج – المجموع)

سُمِّيَ بِذَلِكَ لِتَمَتُّعِهِ بِسُقُوطِ عَوْدِهِ لِلْإِحْرَامِ بِالْحَجِّ مِنْ مِيقَاتِ طَرِيقِهِ وَقِيلَ لِتَمَتُّعِهِ بَيْنَ النُّسُكَيْنِ بِمَا كَانَ مَحْظُورًا عَلَيْهِ ‘ ( فَصْلٌ فِي أَرْكَانِ النُّسُكَيْنِ وَبَيَانِ وُجُوهِ أَدَائِهِمَا وَمَا يَتَعَلَّقُ بِهِ – تحفة المحتاج)

 

– ACJU Fatwa –