Researched Fatwa
தமத்துஃ முறையில் ஹஜ் செய்யக்கூடியவர்கள் முதலில் உம்ராவை செய்துவிட்டு துல் ஹிஜ்ஜாவின் பிறை 08இல் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் செய்வார்கள். ஆனால் அவ்வல் மதீனா செல்பவர்கள் மதீனாவிலிருந்து வரும்போது பிறை 05இல் இஹ்ராம் செய்கிறார்கள். இதற்கு தமத்துஃ என்று சொல்லப்படுவது பற்றிய மார்க்க வழிகாட்டல்
Question

Fatwa

பதில்: தமத்துஃ முறையில் ஹஜ் செய்யக்கூடியவர்கள் உம்ரா செய்துவிட்டு மீக்காத்தை விட்டும் வெளியில் சென்று, மீண்டும் ஹஜ் செய்வதற்காக மக்கா சென்றாலும் ஷாபிஈ மத்ஹபின் சரியான கருத்துப்படி அவருக்கு முதமத்திஃ என்றே சொல்லப்படும்.
இந்நிலையில், முதமத்திஃ ஒருவர் உம்ரா செய்து விட்டு மதீனா சென்று மீண்டும் ஹஜ்ஜுக்காக மக்கா வரும் போது மீக்காத்தில் இஹ்ராம் கட்டுவதால் இரு அமல்களுக்கும் இரு மீக்காத்துகள் கிடைத்து விடுகின்றன என்பதனால் அவர் முதமத்திஃ ஆக இருந்தாலும் தமு கொடுக்கத் தேவையில்லை. ஏனெனில் முதமத்திஃ தமு கொடுப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்று அவர் மீண்டும் ஹஜ்ஜுக்காக மீகாத் ஒன்றுக்கு செல்லாமல் இருத்தல் வேண்டும் என்பதாகும்.
وإِنَّمَا يَجِبُ الدَّمُ على المُتَمَتع بأرْبَعة شُرُوط: أن لا يَعُودَ إلى ميقَات بَلَده لإحْرَام الحَج وأنْ يكُونَ إِحْرَامهُ بالعُمْرَة في أشْهُر الْحَج وأنْ يَحُجَّ من عامِهِ وأنْ لا يكون مِنْ حاضري المسْجِد الْحَرَام وهم أهْلُ الْحَرَم ومَنْ كانَ منه عَلَى أقَل مِنْ مَرْحَلَتَيْن. (فَصْلٌ في صفة الإِحرام وما يكون بعده – الإيضاح فى مناسك الحج والعمرة)
(الشَّرْطُ الرَّابِعُ) أَنْ لَا يَعُودَ إلَى الْمِيقَاتِ بِأَنْ أَحْرَمَ بِالْحَجِّ مِنْ نَفْسِ مَكَّةَ وَاسْتَمَرَّ فَلَوْ عَادَ إلَى الْمِيقَاتِ الَّذِي أَحْرَمَ بِالْعُمْرَةِ مِنْهُ وَإِلَى مَسَافَةِ مِثْلِهِ وَأَحْرَمَ بِالْحَجِّ فَلَا دَمَ بِالِاتِّفَاقِ وَلَوْ أَحْرَمَ بِهِ مِنْ مَكَّةَ ثُمَّ ذَهَبَ إلَى الْمِيقَاتِ مُحْرِمًا فَفِي سُقُوطِهِ الْخِلَافُ الَّذِي سَنَذْكُرُهُ إنْ شَاءَ اللَّهُ تَعَالَى فِي من جاوز الميقات غير محرم ثم عاد إليه مُحْرِمًا وَلَوْ عَادَ إلَى مِيقَاتٍ أَقْرَبَ إلَى مَكَّةَ مِنْ مِيقَاتِ عُمْرَتِهِ وَأَحْرَمَ مِنْهُ بِأَنْ كَانَ مِيقَاتُ عُمْرَتِهِ الْجُحْفَةَ فَعَادَ إلَى ذَاتِ عِرْقٍ فَهَلْ هُوَ كَالْعَوْدِ إلَى مِيقَاتِ عُمْرَتِهِ فِيهِ وَجْهَانِ.
(أَحَدُهُمَا) لَا وَعَلَيْهِ دَمٌ لِأَنَّهُ دونه (وصحهما) نعم لِأَنَّهُ أَحْرَمَ مِنْ مَوْضِعٍ لَيْسَ سَاكِنُوهُ مِنْ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ قَالَ الرَّافِعِيُّ وَهَذَا اخْتِيَارُ الْقَفَّالِ وَالْمُعْتَبَرِينَ وَقَطَعَ الْفُورَانِيُّ بِأَنَّهُ لَوْ سَافَرَ بعد عمرته من مَكَّةَ سَفَرًا تُقْصَرُ فِيهِ الصَّلَاةُ ثُمَّ حَجَّ مِنْ سَنَتِهِ لَا دَمَ عَلَيْهِ. (فَصْلٌ فِي الِاسْتِئْجَارِ لِلْحَجِّ – كتاب الحج – المجموع)
– ACJU Fatwa –