2026 மார்ச் 01ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவாகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் யுவதிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு கண்டி, யஹலதென்ன பிரதேசத்தில் நடைபெற்றது.
இதில், சமூகத்தில் சிறந்த முன்மாதிரி மிக்க பெண்மணியாக திகழ்வதற்கான இஸ்லாம் கூறும் வழிவகைகள் குறித்து தெளிவுகள் வழங்கப்பட்டன.
குறித்த செயலமர்வில், யஹலதென்ன பிரதேசத்திலுள்ள 110க்கும் மேற்பட்ட யுவதிகள் கலந்து பயன்பெற்றனர்.
இதில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.

– ACJU Media –



