அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள் விவகாரப் பிரிவினால் திருகோணமலை மாவட்டக் கிளை மற்றும் அம்மாவட்டத்திலுள்ள 08 பிராந்தியக் கிளைகள் ஆகியவற்றிற்கான நிர்வாகக் குழுத் தெரிவுகள் 2026 ஆகஸ்ட் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில், ஜம்இய்யாவின் யாப்பு விதிகளுக்கமைய இரகசிய வாக்கெடுப்பு முறையில் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டன.
அதன்படி, திருகோணமலை நகர், கிண்ணியா, மூதூர், கந்தளாய், குச்சவெளி, தோப்பூர், புல்மோட்டை மற்றும் முள்ளிப்பொத்தானை ஆகிய பிராந்தியக் கிளைகளுக்கான நிர்வாகத் தெரிவுகள் அந்தந்த பகுதிகளில் நடத்தப்பட்டு ஒவ்வொரு கிளைக்குமான காரியக் குழுவினர் தெரிவு செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, மேற்படி புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் முன்னைய மாவட்டக் கிளை உறுப்பினர்கள் கிண்ணியா பிரதேசக் கிளைக் காரியாலயத்தில் ஒன்றுதிரட்டப்பட்டு திருகோணமலை மாவட்டக் கிளைக்கான தெரிவு நடத்தப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு முறையில் மாவட்ட நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
குறித்த தெரிவுகள், ஜம்இய்யாவின் கிளைகள் விவகாரப் பிரிவின் தவிசாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ், அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் ஆகியோரது மேற்பார்வையில் ஜம்இய்யாவின் ஆளணியினரின் பங்களிப்புடன் நேர்த்தியாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.









– ACJU Media –


