அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் ‘சமூகத்திற்காக ஆலிம்கள் ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் கடமைகள்’ எனும் தொனிப்பொருளில் ஆலிம்களுக்கான விசேட செயலமர்வொன்று 2026 ஜூலை 25 அன்று ஹப்புத்தளை, ஹனஃபிய்யாஹ் மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதன்போது, சமூக முன்னேற்றத்தில் ஆலிம்களின் வகிபாகம் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகள், அதிலுள்ள சவால்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் விளக்காட்சிகளுடன் தெளிவுகள் வழங்கப்பட்டன.
அத்துடன், ஆலிம்களின் ஆளுமை விருத்தி, ஒழுக்க விழுமியம், மார்க்க அறிவு, சமூக சிந்தனை போன்ற விடயங்களில் ஆலிம்கள் தம்மை வளப்படுத்திக் கொள்வதன் அவசியம் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
குறித்த செயலமர்வில் ஹப்புத்தளை பிரதேசத்தில் உள்ள ஆலிம்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து ஹப்புத்தளை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்கும் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியும், அப்பிரதேசத்திலுள்ள பெண்களுக்கான பயான் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில், ஜம்இய்யாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், அஷ்-ஷைக் பவாஸ், சகோதரர் ரம்ஸி க்ராத்தி ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.





– ACJU Media –


