அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில், குர்ஆன் மத்ரஸா முஅல்லிமாக்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி 2026 ஜூலை 19 அன்று லியாஸ் ப்ரோட்வே, அல்-பலாஹ் மஸ்ஜிதில் சிறப்பாக நடைபெற்றது.
சுமார் 06 வருட கால இடைவெளிக்குப் பின்னர், ‘தஜ்தீத்’ எனப்படும் ஜம்இய்யாவின் புதிய பயணத்திற்கமைய பல மேம்படுத்தல்களுடன் இப்பயிற்சி நெறி மீண்டும் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயிற்சிநெறியில் முஅல்லிமாக்களுக்கான நடத்தை விதிகள், கற்பித்தல் முறைமை, வகுப்பறை முகாமைத்துவம், ‘தஜ்தீத்’ முறைமையிலான அல்-குர்ஆன் மத்ரஸா மேலாண்மை, தஜ்வீத் பாடம், மத்கலுல் குர்ஆன் மற்றும் மஆரிபுல் வஹீ பாடநூல்கள் கற்பித்தல் முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தெளிவான முறையில் விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன், இது குறித்த சந்தேகங்களுக்கும் தெளிவுகள் வழங்கப்பட்டன.
இப்பயிற்சி நெறியில் 08 மாவட்டங்களை சேர்ந்த முஅல்லிமாக்கள் கலந்து பயன்பெற்றனர்.
இதில் ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் ஆளணியினரான அஷ்-ஷைக் அஃலம், அஷ்-ஷைக் முஹம்மத் ஹாஷிமி, அஷ்-ஷைக் அஸ்வர் அலி, அஷ்-ஷைக் இர்ஷாத் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
– ACJU Media –


