ஹஜ்ஜின் கடமைகள் தொடர்பான மார்க்க விளக்கம் 

FATWA #ACJU/FTW/2024/30-613

Question

ஹஜ்ஜின் பர்ழுகள் மற்றும் வாஜிப்கள் எத்தனை? அவை யாவை? ஹஜ்ஜின் கடமைகளில் ஒன்று விடுபட்டால் ஹஜ்ஜின் நிலை என்ன? 

Fatwa

ACJU/FTW/2024/30-613
2025.11.18 – 1447.05.26
 
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ﷺ அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
 

ஹஜ்ஜின் பர்ழுகள் மற்றும் வாஜிப்கள் என அதன் கடமைகள் இரு வகைப்படுகின்றன. 

ஹஜ்ஜின் பர்ழுகள் பின்வருமாறு:

1. இஹ்ராம் (ஹஜ்ஜுடைய அமல்களை ஆரம்பிப்பதற்கான நிய்யத்)
2. அரஃபாவில் தரித்தல்
3. ஃபர்ழான தவாப் செய்தல் (தவாபுல் இபாழா)
4. ஸஈ செய்தல்
5. தலை முடியை சிரைத்தல் அல்லது குறைத்தல்1
 
1. இஹ்ராம் (ஹஜ்ஜுடைய அமல்களை ஆரம்பிப்பதற்கான நிய்யத்)
ஹஜ்ஜுடைய அனைத்து கடமைகளும் நிய்யத் வைத்த பின்னர் செய்வது அவசியமாகும். ஹஜ் மற்றும் உம்ராவுக்கான நிய்யத் பின்வரும் முறைகளில் அமைய முடியும்.
 
• இப்ராத் – மீக்காத்தில் نَوَيْت الْحَجَّ وَأَحْرَمْت بِهِ لِلَّهِ تَعَالَى என்று ஹஜ்ஜை மாத்திரம் நிய்யத் வைத்தல். இதுவே ஏற்றமான முறையாகும்.  
• தமத்துஃ – மீக்காத்தில் نَوَيْت الْعُمْرَة وَأَحْرَمْت بِهِ لِلَّهِ تَعَالَى என்று உம்ராவை மாத்திரம் நிய்யத் வைத்து, உம்ரா செய்துவிட்டு இஹ்ராமைக் களைதல். 
பின்னர் மக்காவிலேயே نَوَيْت الْحَجَّ وَأَحْرَمْت بِهِ لِلَّهِ تَعَالَى என்று ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்து, ஹஜ்ஜுடைய அமல்களை நிறைவேற்றல். எமது நாட்டில் இம்முறையில் நிய்யத்தை வைப்பது வழக்கமாகும்.
• கிரான் – மீக்காத்தில் نَوَيْت الْحَجَّ والْعُمْرَة وَأَحْرَمْت بِهِما لِلَّهِ تَعَالَى என்று ஹஜ் மற்றும் உம்ரா இரண்டையும் சேர்த்து நிய்யத் வைத்து, ஹஜ்ஜின் அமல்களை மாத்திரம் செய்தல். அதனால் உம்ராவும் நிறைவேறிவிடும்.
• இத்லாக் – நிய்யத் வைக்கும் போது ஹஜ், உம்ரா என இரண்டையும் குறிப்பிடாது نَوَيْت النُسُكَ وَأَحْرَمْت بِهِ لِلَّهِ تَعَالَى என்று பொதுவாக நிய்யத் வைத்தல். பின்னர் இரண்டில் ஒன்றை குறிப்பாக்கிக் கொள்ளல்.
• தஃலீக் – ஒரு நபரைக் குறிப்பிட்டு அவரது நிய்யத்தைப் போன்று நான் நிய்யத் வைக்கிறேன் என்று நிய்யத் வைத்தல். அவர் ஹஜ், உம்ராவில் எதனை நிய்யத் வைத்தாரோ அதுவே இவரது நிய்யத்தாகக் கருதப்படும்.2
 
2. அரஃபாவில் தரித்தல்
அரபாவில் சிறிது நேரம் தரிப்பது பர்ழாகும். அதன் நேரம் துல் ஹிஜ்ஜா பிறை ஒன்பதாம் நாள் சூரியன் உச்சி சாய்ந்ததில் இருந்து பத்தாம் நாள் சூரியன் உதயமாகும் வரையாகும். 3
 
அரபாவுக்கு குறித்த நேரத்தில் சமுகமளிக்க தவறும் பட்சத்தில் ஹஜ் நிறைவேறமாட்டாது. எனவே,  உம்ராவுடைய அமல்களாகிய தவாப், ஸஈ மற்றும் முடியை சிரைத்தல் அல்லது குறைத்தல் ஆகியவைகளை செய்து இஹ்ராமிலிரிந்துக் களைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை கழாச் செய்ய வேண்டும். 4
      
3. தலை முடியை சிரைத்தல் அல்லது குறைத்தல் 
இதற்குரிய நேரம் அரபாவில் தரித்த பின்னர் துல் ஹிஜ்ஜா பிறை பத்தாம் நாள் நடு இரவில் இருந்து ஆரம்பமாகின்றது. இதனை மினாவில் பெருநாளுடைய தினத்தில் செய்வது ஏற்றமாகும். 5
 
எனினும், இதனை நிறைவேற்றுவதற்கு குறிப்பிட்ட காலவரையறை இல்லாத காரணத்தினால் எப்பொழுது செய்தாலும் ஹஜ் நிறைவேறிவிடுவதுடன் மினாவுக்கு வெளியில் எங்கும் செய்வதற்கு முடியும். 6
 
4. தவாஃப் செய்தல் (தவாபுல் இபாழா அல்லது தவாபுர் ருக்ன்)
இதற்குரிய நேரம் அரஃபாவில் தரித்த பின்னர் துல் ஹிஜ்ஜா பிறை பத்தாம் நாள் நடு இரவில் இருந்து ஆரம்பமாகின்றது. இதனை பெருநாளுடைய தினத்தில், தலை முடியை சிரைத்த பின்னர் செய்வது ஏற்றமாகும். 7
 
எனினும், இதற்கும் காலவரையறை இல்லாததால் வாழ்நாளில் எப்பொழுதும் செய்வதற்கு அனுமதியுள்ளது.
 
5. ஸஈ செய்தல்
ஹஜ்ஜுடைய கடமையான தவாப்ஃ அல்லது தவாஃபுல் குதூமின் பின்னர் ஸஈ செய்வது கட்டாயமாகும். அவ்விரு தவாஃபை விட ஸஈயை முற்படுத்திச் செய்வதன் மூலம் ஸஈ நிறைவேறமாட்டாது. 8
தவாஃபுல் குதூம் என்பது ஹஜ், உம்ராவுடைய நிய்யத் இல்லாமல் அல்லது ஹஜ்ஜுடைய நிய்யத்தை வைத்து அரஃபாவில் தரிக்க முன்னர் மக்காவில் நுழையக்கூடிய ஒவ்வொருவரும் செய்யக்கூடிய ஸுன்னத்தான தவாஃபாகும்.
 
மேற்கூறப்பட்ட ஃபர்ளுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் வரை ஒருவரது ஹஜ் நிறைவேற மாட்டாது. மேலும், அவைகளை நிறைவேற்றாமல் அதற்கு பகரமாக தமு (குற்றப்பரிகாரம்) கொடுப்பதற்கு முடியாது.9  
 
ஹஜ்ஜின் வாஜிபுகள் பின்வருமாறு:
1. மீக்காத்திலிருந்து இஹ்ராம் அணிதல்
2. துல் ஹஜ் பத்தாவது நாள் இரவு முஸ்தலிஃபாவில் தங்குதல்
3. துல் ஹஜ் பத்தாவது நாள் ஜம்ரத்துல் அகபாவுக்கு கல்லெறிதல்
4. தஷ்ரீக்குடைய நாட்களின் (துல் ஹஜ் பிறை 11,12,13) ஜம்ரத்துல் ஊலா, ஜம்ரத்துல் வுஸ்தா, ஜம்ரத்துல் அகபா ஆகிய மூன்று ஜம்ராக்களுக்கு கல்லெறிதல்
5. அந்நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குதல்.
6. இஹ்ராமுடன் இருக்கும் போது தடுக்கப்பட்டவைகளிலிருந்து தவிர்ந்துகொள்ளல் 10
 
01. மீக்காத்திலிருந்து இஹ்ராம் அணிதல்
ஒவ்வொரு திசையிலிருந்து ஹஜ் மற்றும் உம்ராவுக்காக வருபவருக்கு அதன் நிய்யத்தை வைப்பதற்கு நியமிக்கப்பட்ட இடத்திற்கு மீக்காத் எனப்படும். அவ்விடத்தை நிய்யத்தின்றி கடப்பது கூடாது. அவை பின்வருமாறு:
 
1. துல் ஹுலைஃபா: மதீனாவின் பக்கமிருந்து வருபவருக்குரிய மீக்காத்தாகும்.
 
2. ஜுஹ்ஃபா: ஷாம், எகிப்து வழியாக வருபவருக்குரிய மீக்காத்தாகும்.
 
3. யலம்லம்: யமன் பகுதியில் இருந்து வருபவருக்குரிய மீக்காத்தாகும்.
 
4. கர்ன்: ஹிஜாஸிலிருந்து வருபவருக்குரிய மீக்காத்தாகும்.
 
5. தாத்து இர்க்: மக்காவுக்குக் கிழக்குப் பகுதியிலிருந்து வருபவருக்குரிய மீக்காத்தாகும்.11 
 
6. மக்கா: மக்காவில் வசிப்பவர் மக்காவிலிருந்து நிய்யத்தை வைப்பார். 
 
02. துல் ஹஜ் பத்தாவது நாள் இரவு முஸ்தலிஃபாவில் தங்குதல் 
அரஃபாவில் தரித்த பின்னர் சிறிது நேரம் முஸ்தலிஃபாவில் தரிப்பது அவசியமாகும். இதன் நேரம் துல் ஹிஜ்ஜா பிறை பத்தாம் நாள் நடு இரவுக்குப் பின்னர் சூரியன் உதயமாகும் வரையாகும். 12
 
03. துல் ஹஜ் பத்தாவது நாள் ஜம்ரத்துல் அகபாவுக்கு கல்லெறிதல்
இதற்குரிய நேரம் துல் ஹிஜ்ஜா பிறை பத்தாம் நாள் நடு இரவிலிருந்து அந்நாள் சூரியன் மறையும் வரையாகும். இதற்கு முன்னர் அரஃபாவில் தரித்திருப்பது நிபன்தனையாகும். 13
 
04. தஷ்ரீக்குடைய நாட்களின் (துல் ஹஜ் பிறை 11,12,13) ஜம்ரத்துல் ஊலா, ஜம்ரத்துல் வுஸ்தா, ஜம்ரத்துல் அகபா ஆகிய மூன்று ஜம்ராக்களுக்கு கல்லெறிதல்.
 
அய்யாமுத் தஷ்ரீக் மூன்று நாட்களில் ஜம்ரத்துல் ஊலா, ஜம்ரத்துல் வுஸ்தா, ஜம்ரத்துல் அகபா ஆகிய மூன்று இடங்களில் ஒவ்வொன்றிலும் சூரியன் உச்சி சாய்ந்த பிறகு ஏழு கற்களை எறிய வேண்டும். 
 
12ஆம் நாளில் சூரியன் உச்சி சாய்ந்த பிறகு கல்லெறிந்து விட்டு, சூரியன் மறைவதற்குள் அங்கிருந்து புறப்படுவதற்கு அனுமதியுள்ளது. 12ஆம் நாள் சூரியன் மறைந்த பிறகும் மினாவில் தரித்திருந்தால் 13ஆம் நாளும் கல்லெறிந்துவிட்டுச் செல்வது அவசியமாகும்.14
 
எனினும், ஒருவர் 12ஆம் நாள் சூரியன் உச்சி சாய்ந்த பிறகு கல்லெறிந்து விட்டு, மினாவில் பயண ஏற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் போது அல்லது பயணத்தை ஆரம்பித்து, மினாவிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் சூரியன் மறைந்து விட்டால் அவர் 13ஆம் நாள் மினாவில் தரித்து கல்லெறிய வேண்டிய அவசியம் கிடையாது. 15
 
05. தஷ்ரீக்குடைய நாட்களின் (துல் ஹஜ் பிறை 11,12,13) இரவுகளில் மினாவில் தங்குதல். 
இம்மூன்று நாட்களின் இரவினுடைய பெரும்பான்மையான நேரங்களில் மினாவில் தங்கியிருப்பது அவசியமாகும்.  16
  
06. இஹ்ராமுடன் இருக்கும் போது தடுக்கப்பட்டவைகளிலிருந்து தவிர்ந்துகொள்ளல்.
இஹ்ராமுடன் இருக்கும் போது உடலுறவில் ஈடுபடுதல், முத்தமிடுதல், திருமணம் செய்தல், அதனை செய்து கொடுத்தல், வேட்டையாடுதல், ஹரத்தின் மரங்கள் மற்றும் புற்பூண்டுகளை பிடுங்குதல், உடலில் மணம் பூசுதல், தலைக்கும் தாடிக்கும் எண்ணை தடவுதல், உடம்பிலுள்ள முடிகளைக் அகற்றல், நகங்களை வெட்டுதல், ஓர் ஆண் தனது தலையை மறைத்தல், தைத்த ஆடையை அனிதல், பெண் முகத்தில் ஒரு பகுதியை மறைத்தல் ஆகிய விடயங்களை மேற்கொள்ளவது கூடாது. 17
 
தவாஃபுல் வதாஃ : ஹஜ் மற்றும் உம்ராவுடைய கடமையினை நிறைவேற்றிய பின்னர் மக்காவிலிருந்து வெளியாகும் ஒருவர் தவாஃபுல் வதாஃ செய்வது வாஜிப் என ஷாபிஈ மத்ஹபின் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதுபற்றிய மேலதிக விளக்கத்தை இவ்விணைப்பில் பார்வையிடலாம் : https://www.acju.lk/ta/hjj-wdh-ifz-ftw-24/
 
ஹஜ்ஜின் வாஜிபுகளில் ஏதாவது ஒன்று விடுபட்ட போதிலும் அதன் பர்ழுகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருப்பின் ஹஜ் நிறைவேறிவிடும். எனினும், அதன் வாஜிப்களில் ஒன்றை விட்டதற்காக தமு (குற்றப்பரிகாரம்) கொடுப்பது அவசியமாகும். தகுந்த காரணங்கள் இன்றி அவைகளை விடுபவர் பாவியாகுவார். 18
 
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
 
 
 
அஷ்ஷைக் எம்.டி.எம். ஸல்மான்  
பதில் செயலாளர் – ஃபத்வாக் குழு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
 
 
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 
 
 
  முஃப்தி எம்.ஐ.எம் ரிழ்வி  
  தலைவர்  
  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 
 
——————————————————————————————————————-

[1] (أركان الحج خمسة) بل ستة: أحدها (الإحرام) أي نية الدخول فيه لخبر «إنما الأعمال بالنيات» (و) ثانيها: (الوقوف) بعرفة لخبر «الحج عرفة» (و) ثالثها: (الطواف) بالكعبة لقوله تعالى: ﴿وليطوفوا بالبيت العتيق﴾ [الحج: ٢٩] والمراد طواف الإفاضة (و) رابعها: (السعي) بين الصفا والمروة لما روى الدارقطني وغيره بإسناد حسن «أنه ﷺ استقبل القبلة في السعي وقال: يا أيها الناس اسعوا فإن السعي قد كتب عليكم» (و) خامسها: (الحلق) أو التقصير (إذا جعلناه نسكا) وقد سبق أنه القول المشهور لتوقف التحلل عليه مع عدم جبر تركه بدم كالطواف (و) سادسها: (الترتيب) في معظم هذه الأركان (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج)

[2] (أَمَّا) الْأَحْكَامُ فَقَدْ أَتَّفَقَتْ نُصُوصُ الشَّافِعِيِّ وَالْأَصْحَابُ عَلَى جَوَازِ الْإِحْرَامِ عَلَى خَمْسَةِ أَنْوَاعٍ الْإِفْرَادُ وَالتَّمَتُّعُ وَالْقِرَانُ وَالْإِطْلَاقُ وَهُوَ أَنْ يُحْرِمَ بِنُسُكٍ مُطْلَقًا ثُمَّ يَصْرِفُهُ إلَى مَا شَاءَ مِنْ حَجٍّ أَوْ عُمْرَةٍ أَوْ كِلَيْهِمَا وَالتَّعْلِيقُ وَهُوَ أَنْ يُحْرِمَ بِإِحْرَامٍ كَإِحْرَامِ – – زيد – فَهَذِهِ الْأَنْوَاعُ الْخَمْسَةُ جَائِزَةٌ بِلَا خِلَافٍ وَذَكَرَ الْمُصَنِّفُ هُنَا الثَّلَاثَةَ الْأَوْلَى (وَأَمَّا) النَّوْعَانِ الآخر فَذَكَرَهُمَا فِي بَابِ الْإِحْرَامِ وَسَنُوَضِّحُهُمَا هُنَاكَ إنْ شَاءَ اللَّهُ تَعَالَى (وَأَمَّا) الْأَفْضَلُ مِنْ هَذِهِ الانواع الثلاثة الاولى (المجموع شرح المهذب)

[3] وَقْتُ الْوُقُوفِ بَيْنَ زَوَالِ الشَّمْسِ يَوْمَ عَرَفَةَ وَطُلُوعِ الْفَجْرِ لَيْلَةَ النَّحْرِ وَهُوَ مَذْهَبُ مَالِكٍ وَأَبِي حَنِيفَةَ وَالْجُمْهُورِ )المجموع شرح المهذب)

[4] (وَمَنْ فَاتَهُ الْوُقُوفُ) وَبِفَوَاتِهِ يَفُوتُ الْحَجُّ كَمَا تَقَدَّمَ (تَحَلَّلَ) أَيْ جَازَ لَهُ التَّحَلُّلُ لِأَنَّ فِي بَقَائِهِ مُحْرِمًا حَرَجًا شَدِيدًا يَعْسُرُ احْتِمَالُهُ. (بِطَوَافٍ وَسَعْيٍ وَحَلْقٍ وَفِيهِمَا) أَيْ السَّعْيِ وَالْحَلْقِ. (قَوْلٌ) إنَّهُمَا لَا يَجِبَانِ فِي التَّحَلُّلِ بِنَاءً عَلَى أَنَّ الْحَلْقَ لَيْسَ بِنُسُكٍ، وَنَظَرًا إلَى أَنَّ السَّعْيَ لَيْسَ مِنْ أَسْبَابِ التَّحَلُّلِ لِإِجْزَائِهِ قَبْلَ الْوُقُوفِ عَقِبَ طَوَافِ الْقُدُومِ، وَالْكَلَامُ فِيمَنْ لَمْ يَتَقَدَّمْ مِنْهُ سَعْيٌ، فَمَنْ سَعَى عَقِبَ طَوَافِ الْقُدُومِ لَا يَحْتَاجُ فِي تَحَلُّلِهِ إلَى سَعْيٍ. (وَعَلَيْهِ دَمٌ وَالْقَضَاءُ) لِلْحَجِّ الَّذِي فَاتَهُ بِفَوَاتِ الْوُقُوفِ تَطَوُّعًا كَانَ أَوْ فَرْضًا. (حاشيتا قليوبي وعميرة)

[5] «ويدخل وقت الحلق ورمي جمرة العقبة وطواف الإفاضة بنصف ليلة النحر» لمن وقف قبله، ويستحب تأخيرها إلى بعد طلوع الشمس للاتباع وما بدا منها قطع التلبية معه. «ويبقى الرمي» لجمرة العقبة وللجمرتين الأخيرتين أداء «إلى آخر» أيام «التشريق» ويبقى «الحلق» يعني إزالة ثلاث شعرات «والطواف» المتبوع بالسعي إن لم يكن سعى عقب طواف القدوم أي وقتهما «أبدًا» فلا يفوتان ما دام حيًّا لأن الأصل عدم التوقيت إلا بدليل، نعم يكره تأخيرهما عن يوم النحر وتأخيرها عن أيام التشريق أشد كراهة وعن خروجه من مكة أشد وأشد (المنهاج القويم شرح المقدمة الحضرمية)

[6] نَعَمْ لَوْ وصَلَ لِوَطَنِهِ قَبْلَ الحَلْقِ ثُمَّ حَلَقَ فِيهِ جازَ لَهُ كَما هُوَ ظاهِرُ صَوْمِها عَقِبَ الحَلْقِ ولَمْ يَحْتَجْ لِاسْتِئْنافِ مُدَّةِ الرُّجُوعِ (تحفة المحتاج)

[7] (وَهَذَا) الَّذِي يُفْعَلُ يَوْمَ النَّحْرِ مِنْ أَعْمَالِ الْحَجِّ أَرْبَعَةٌ، وَهِيَ (الرَّمْيُ وَالذَّبْحُ وَالْحَلْقُ وَالطَّوَافُ يُسَنُّ تَرْتِيبُهَا كَمَا ذَكَرْنَا) وَلَا يَجِبُ (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج)

[8] (وشرطه) ليقع عن الركن (أن يبدأ) في الأولى وما بعدها من الأوتار (بالصفا)،… (وأن يسعى بعد طواف ركن أو قدوم)؛ لأنه الوارد عنه ﷺ بل حكي فيه الإجماع فلا يجوز بعد طواف نفل كأن أحرم من بمكة بحج منها ثم تنفل بطواف وأراد السعي بعده كما في المجموع    (تحفة المحتاج في شرح المنهاج)

لَوْ سَعَى قَبْلَ الطَّوَافِ لَمْ يَصِحَّ سَعْيُهُ عِنْدَنَا وَبِهِ قَالَ جُمْهُورُ الْعُلَمَاءِ وَقَدَّمْنَا عَنْ الْمَاوَرْدِيُّ أَنَّهُ نَقَلَ الْإِجْمَاعَ فِيهِ وَهُوَ مَذْهَبُ مَالِكٍ وَأَبِي حَنِيفَةَ وَأَحْمَدَ     (المجموع شرح المهذب)

[9] (ولا تجبر) هذه الأركان ولا شيء منها (بدم) بل يتوقف عليها لأن الماهية لا تحصل إلا بجميع أركانها. (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج)

[10] وأما واجباته فخمسة أيضا الإحرام من الميقات، والرمي في يوم النحر وأيام التشريق، والمبيت بمزدلفة، والمبيت ليالي منى، واجتناب محرمات الإحرام. وأما طواف الوداع فقد تقدم أنه ليس من المناسك فعلى هذا لا يعد من الواجبات فهذه تجبر بدم، وتسمى أبعاضا وغيرها يسمى هيئة.     (مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج)

[11]  والميقات المكاني للحج في حق من بمكة نفس مكة وقيل: كل الحرم وأما غيره فميقات المتوجه من المدينة ذو الحليفة ومن الشام ومصر والمغرب الجحفة ومن تهامة اليمن يلملم ومن نجد الحجاز قرن ومن المشرق ذات عرق والأفضل أن يحرم من أول الميقات (منهاج الطالبين وعمدة المفتين في الفقه)

[12]  (وَيَبِيتُونَ) وُجُوبًا أَيْ الدَّافِعُونَ مِنْ عَرَفَةَ بَعْدَ الْوُقُوفِ (بِمُزْدَلِفَةَ) لِلِاتِّبَاعِ فَيُجْبَرُ بِدَمٍ وَقِيلَ سُنَّةٌ وَرَجَّحَهُ الرَّافِعِيُّ وَقِيلَ رُكْنٌ وَعَلَيْهِ كَثِيرُونَ وَاخْتَارَهُ السُّبْكِيُّ وَيَحْصُلُ بِلَحْظَةٍ مِنْ النِّصْفِ الثَّانِي وَلَوْ بِالْمُرُورِ (تحفة المحتاج في شرح المنهاج)

[13]  رَمْيُ جَمْرَةِ الْعَقَبَةِ وَاجِبٌ بِلَا خِلَافٍ لِمَا ذَكَرَهُ الْمُصَنِّفُ وَلَيْسَ هُوَ بِرُكْنٍ فَلَوْ تَرَكَهُ حَتَّى فَاتَ وَقْتُهُ صَحَّ حَجُّهُ وَلَزِمَهُ الدَّمُ وَأَمَّا وَقْتُ الرَّمْيِ فَقَالَ الشَّافِعِيُّ وَالْأَصْحَابُ السُّنَّةُ أَنْ يَصِلُوا مِنًى بَعْدَ طُلُوعِ الشَّمْسِ وَيَرْمُوا بَعْدَ ارْتِفَاعِهَا قَدْرَ رُمْحٍ فَإِنْ قَدَّمُوا الرَّمْيَ عَلَى هَذَا جَازَ بِشَرْطِ أَنْ يَكُونَ بَعْدَ نِصْفِ لَيْلَةِ النَّحْرِ وَبَعْدَ الْوُقُوفِ وَلَوْ أَخَّرُوهُ عَنْهُ جَازَ وَيَكُونُ أَدَاءً إلَى آخِرِ نَهَارِ يَوْمِ النَّحْرِ بِلَا خِلَافٍ وَهَلْ يَمْتَدُّ إلَى طُلُوعُ فَجْرِ تِلْكَ اللَّيْلَةِ فِيهِ وَجْهَانِ مَشْهُورَانِ وَمِمَّنْ حَكَاهُمَا صَاحِبُ التَّقْرِيبِ وَالشَّيْخُ أَبُو مُحَمَّدٍ الْجُوَيْنِيُّ وَوَلَدُهُ إمَامُ الْحَرَمَيْنِ وَآخَرُونَ (أَصَحُّهُمَا) لَا يَمْتَدُّ (المجموع شرح المهذب –   النووي)

[14] (فَإِذَا) (رَمَى الْيَوْمَ) الْأَوَّلَ (وَ) الثَّانِي مِنْ أَيَّامِ التَّشْرِيقِ (وَأَرَادَ النَّفْرَ) مَعَ النَّاسِ (قَبْلَ غُرُوبِ الشَّمْسِ) فِي الْيَوْمِ الثَّانِي (جَازَ وَسَقَطَ مَبِيتُ اللَّيْلَةِ الثَّالِثَةِ وَرَمَى يَوْمَهَا) وَلَا دَمَ عَلَيْهِ لِقَوْلِهِ تَعَالَى ﴿فَمَنْ تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلا إِثْمَ عَلَيْهِ﴾ [البقرة: ٢٠٣] وَلِإِتْيَانِهِ بِمُعْظَمِ الْعِبَادَةِ،وَيُؤْخَذُ مِنْ هَذَا التَّعْلِيلِ أَنَّ مَحَلَّ ذَلِكَ إذَا بَاتَ اللَّيْلَتَيْنِ الْأُولَيَيْنِ فَلَوْ لَمْ يَبِتْهُمَا لَمْ يَسْقُطْ عَنْهُ مَبِيتُ الثَّالِثَةِ وَلَا رَمْيُ يَوْمِهَا، وَهُوَ كَذَلِكَ فِيمَنْ لَا عُذْرَ لَهُ كَمَا فِي الْمَجْمُوعِ عَنْ الرُّويَانِيِّ عَنْ الْأَصْحَابِ،..(نهاية المحتاج إلى شرح المنهاج)  

[15] (فإن) (لم ينفر) بكسر الفاء وضمها أي يذهب (حتى غربت) أي الشمس (وجب مبيتها ورمي الغد) ولو غربت وهو في شغل الارتحال فله النفر؛ لأن في تكليفه حل الرحل والمتاع مشقة عليه،…(نهاية المحتاج إلى شرح المنهاج)

[16] (إذَا عَادَ إلَى مِنًى) بَعْدَ الطَّوَافِ وَالسَّعْيِ إنْ لَمْ يَكُنْ سَعَى بَعْدَ قُدُومٍ (بَاتَ بِهَا) حَتْمًا (لَيْلَتَيْ) يَوْمَيْ (التَّشْرِيقِ) وَالثَّالِثَةُ أَيْضًا لِلِاتِّبَاعِ الْمَعْلُومِ مِنْ الْأَخْبَارِ الصَّحِيحَةِ مَعَ خَبَرِ «خُذُوا عَنِّي مَنَاسِكَكُمْ» وَالْوَاجِبُ فِيهِ مُعْظَمُ اللَّيْلِ (نهاية المحتاج إلى شرح المنهاج)

[17] باب محرمات الإحرام أحدها: ستر بعض رأس الرجل بما يعد ساترا إلا لحاجة ولبس المخيط أو المنسوج أو المعقود في سائر بدنه إلا إذا لم يجد غيره ووجه المرأة كرأسه … الثاني: استعمال الطيب في ثوبه أو بدنه ودهن شعر الرأس أو للتحية … الثالث: إزالة الشعر أو الظفر … الرابع: الجماع … الخامس: اصطياد كل مأكول بري. قلت: وكذا المتولد منه ومن غيره والله … ويحرم قطع نبات الحرم الذي لا يستنبت والأظهر تعلق الضمان به وبقطع أشجاره … قلت: والمستنبت كغيره على المذهب … (منهاج الطالبين وعمدة المفتين في الفقه)

[18] واجباته أي الحج خمسة وهو ما يجب بتركه الفدية: (قوله: وهي) أي الواجبات. (وقوله: ما يجب بتركه الفدية) أي والإثم إن كان لغير عذر (واعلم) أن الفرق بين الواجبات والأركان خاص بهذا الباب، لأن الواجبات في غيره تشمل الأركان والشروط، فكل ركن واجب، ولا عكس، فبينهما عموم وخصوص بإطلاق.)   إعانة الطالبين على حل ألفاظ فتح المعين(