2026 மே 06ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவினால், பொலன்னறுவை மாவட்டத்தில் டிட்வா அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதார நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்கான கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, முஸ்லிம் கொலனி, மாணிக்கம்பிட்டி, திவுலான, சுங்காவில், ஹதமன, கல்லேல்ல, ரஹ்மத் நகர், மஜீத்புரம், தம்பாளை, கட்டுவன்வில, முஸ்லிம் கொலனி-பச்சைப்பள்ளி மற்றும் வெலிகந்த ஆகிய பொலன்னறுவை மாவட்டத்தின் 12 கிராமங்களுக்கு நேரடியான கள விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் தொழில் முயற்சிகளில் ஏற்பட்ட பாதிப்பு நிலைமைகள் குறித்தும் தகவல்கள் திரட்டப்பட்டன.
பொலன்னறுவை மாவட்ட ஜம்இய்யா மற்றும் பிரதேசக் கிளைகளின் ஒத்துழைப்புடன் இக்கள விஜயங்கள் நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டன.
ஜம்இய்யா சார்பில் அஷ்-ஷைக் பவாஸ், சகோதரர் நுபைல், அஷ்-ஷைக் பஸால், சகோதரர் இர்பஃத் அஷ்-ஷைக் அஃலம் ஆகியோர் இவ்விஜயத்தில் கலந்துகொண்டு மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
-ACJU Media-




