புத்தளம் நகர் கிளை ஜம்இய்யாவிற்குட்பட்ட கதீப்மார்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

2026 மே 08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் புத்தளம் நகர் கிளை ஜம்இய்யாவிற்குட்பட்ட கதீப்மார்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி புத்தளம், அல்-ஹுதா மஸ்ஜிதில் நடைபெற்றது.

ஜுமுஆ குத்பா பிரசங்கங்களின் தரத்தையும் செயற்றிறனையும் மேம்படுத்தி, அவற்றைச் சமூகத்திற்கு மேலும் அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், புத்தளம் நகர் கிளைக்குட்பட்ட மஸ்ஜிதுகளில் கதீப்களாக கடமையாற்றும் பல ஆலிம்கள் கலந்து பயன்பெற்றனர்.

இந்நிகழ்வில் வளவாளர்களாக ஜம்இய்யாவின் ஆலிம்கள் விவாகாரப் பிரிவின் உறுப்பினர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். யஹ்யா, பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து புத்தளம் மாவட்ட ஜம்இய்யாவின் ஆலிம்களுடன் ஒரு சிநேகபூர்வ சந்திப்பொன்றும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன