கொதொடுவ பிரதேசத்தில் டிட்வா அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண உதவித்தொகை கையளிக்கும் நிகழ்வு

2026 ஜனவரி 30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவின் முயற்சியினால் கொதொடுவ பிரதேசத்தில் டிட்வா அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண உதவித்தொகை கையளிக்கும் நிகழ்வு கொதொடுவ ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், UWT மற்றும் SLMCC-UK ஆகிய தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியின் கீழ் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 44 குடும்பங்களுக்கு தலா 40,000 ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், ஜம்இய்யாவின் சமூக சேவைப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்,  கொழும்பு மாவாட்ட ஜம்இய்யாவின் தலைவர் அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத், சமூக சேவைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் நுபைல் ஆகியோருடன் ஜம்இய்யாவின் கொழும்பு கிழக்கு கிளையின் பிரதிநிதிகள், மஸ்ஜிதுல் ஜப்பார் பள்ளிவாயல் நிர்வாகிகள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன