அல்-குர்ஆன் மத்ரஸா பாடத்திட்ட கற்பித்தல் முறையினை மேம்படுத்துவது தொடர்பிலான ஆலோசனைக் கூட்டம்

2026 ஜூன் 02ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் நெறிப்படுத்தலில், அல்-குர்ஆன் மத்ரஸா பாடத்திட்ட கற்பித்தல் முறையினை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கூட்டம் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

‘மத்ஹலுல் குர்ஆன்’ அல்-குர்ஆன் மத்ரஸா பாடத்திட்டத்தின் 07 வருட கால, தொடரான வெற்றிகர பயணம் குறித்து இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன், அதன் சிங்கள மொழிபெயர்ப்பினை கற்பிப்பதற்கான நுணுக்கங்கள், முறைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும் முஅல்லிம்களுக்கான கற்பித்தல் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

குறித்த கூட்டத்தில், கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் உள்ள, ‘மஆரிபுல் வஹீ ‘ மற்றும் ‘மத்ஹலுல் குர்ஆன்’ அல்-குர்ஆன் மத்ரஸா பாடத்திட்டங்களை கற்பிப்பதில் பல வருட அனுபவம் கொண்ட முஅல்லிம்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவு சார்பில் அஷ்-ஷைக் அஃலம் கலந்துகொண்டிருந்தார்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன