அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மகளிர் விவகாரப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஜம்இய்யாவின் சேவைகள், பணிகள் மற்றும் வெளியீடுகள் குறித்து ஆலிமாக்களுக்கு தெளிவூட்டல்’ எனும் செயற்றிட்டமானது முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்திலுள்ள மகளிர் அரபுக் கல்லூரிகளை மையப்படுத்தி நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், 2026 ஜனவரி 27ஆம் திகதி, ஜம்இய்யாவின் மகளிர் விவகாரப் பிரிவினால் வெள்ளவத்தை, பஃத்ஹுஸ் ஸலாம் மகளிர் அரபுக் கல்லூரியில் ஜம்இய்யா பற்றிய அறிமுகம் வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.
இதில், கல்லூரியின் அதிபர் அல்-ஹாஜ் பலாஹ் மௌலானா அவர்கள் கலந்து கொண்டதுடன் அங்கு கற்கும் 57 மாணவிகள் மற்றும் கற்பிக்கும் 08 முஅல்லிமாக்கள் கலந்து பயன்பெற்றனர்.
இந்நிகழ்வில், மகளிர் விவகாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் சிராஜ் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டதுடன் ‘மன்ஹஜ்’ உள்ளிட்ட ஜம்இய்யாவின் வெளியீடுகளையும் கையளித்தார்.



– ACJU Media –



