2026 மார்ச் 14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் நுவரெலியா, மீபிலிமன்ன ஜுமுஆ பள்ளிவாயல் மஹல்லாவிற்குட்பட்ட தாய்மார்களுக்கான பிள்ளை வளர்ப்பு தொடர்பிலான செயலமர்வு குறித்த பள்ளிவாயலில் நடைபெற்றது.
தற்போதைய காலகட்டத்தில் பிள்ளைகளை சிறந்தவர்களாக வளர்த்தெடுப்பதன் அவசியம் குறித்தும், அதற்கான இஸ்லாமிய வழிகாட்டல்கள் குறித்தும் இதன்போது விளக்கமளிக்கப்பதுடன் இதில் காணப்படும் நவீன சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
இதில் மீபிலிமன்ன மஹல்லாவிற்குட்பட்ட, 40க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து பயன்பெற்றனர்.
இச்செயலமர்வில், வளவாளராக ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி க்ராத்தி அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.
– ACJU Media –



