நுவரெலியா ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்ற இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு

2026 மார்ச் 13ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் நுவரெலியா ஜுமுஆ பள்ளிவாயல் மஹல்லாவிற்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு குறித்த பள்ளிவாயலில் நடைபெற்றது.

இதில், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரிடையே ஆரோக்கியமான உறவையும், பிணைப்பையும், பரஸ்பர புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதற்கான வழிவகைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் என 125க்கும் மேற்பட்டோர் கலந்து பயன்பெற்றனர்.

இதில் வளவாளராக ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி க்ராத்தி அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன