வட்டதெனிய மொஹிதீன் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி

2026 மார்ச் 15ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் வட்டதெனிய மொஹிதீன் ஜுமுஆ பள்ளிவாயல் மஹல்லாவிற்குட்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்ச்சி குறித்த பள்ளிவாயலில் நடைபெற்றது.

இதில், மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை எவ்வாறு வெற்றிகரமாக அமைத்துக்கொள்வது என்பது தொடர்பில் தெளிவுகள் வழங்கப்பட்டதுடன் உயர்கல்வித் துறைகள் மற்றும் அவற்றிற்கான எதிர்கால தொழிற்சந்தை வாய்ப்புகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.

இதில் வளவாளராக ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி க்ராத்தி அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன