2026 ஏப்ரல் 28ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவு மற்றும் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் சேனபுர முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில், மாணவர்களது ஒழுக்கம், மார்க்கம், கல்வி மற்றும் பண்பாட்டு அம்சங்களில் முன்னேற்றம் அடைவதற்கான வழிவகைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் எதிர்காலத்தில் முன்மாதிரிமிக்க சிறந்த சமூகமாக திகழ்வதற்கான வாழ்வியல் குறிப்புகளும் வழங்கப்பட்டன.
இதில், குறித்த பாடசாலையில் கற்கும் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.
இந்நிகழ்வில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் உறுப்பினர் அஷ்-ஷைக் ஸபருல்லாஹ் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
– ACJU Media –


