‘நல்லிணக்கமும் ஆரோக்கிய வாழ்வும்’ எனும் தொனிப்பொருளில் சேனபுர புனர்வாழ்வு மையத்தில் நடைபெற்ற வழிகாட்டல் நிகழ்வு

2026 ஏப்ரல் 28ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவு மற்றும் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் ‘நல்லிணக்கமும் ஆரோக்கிய வாழ்வும்’ எனும் தொனிப்பொருளிலான வழிகாட்டல் நிகழ்வொன்று சேனபுர புனர்வாழ்வு மையத்தில் நடைபெற்றது.

அங்கு சிகிச்சை பெற்றுவரும் நபர்களை மையப்படுத்தி நடைபெற்ற இந்நிகழ்வில், சுமார் 170க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இதன்போது, நல்ல சிந்தனைகளை வளர்த்தல் மற்றும் கடைபிடித்தல், சமூகத்திற்கு பயனுள்ள மனிதனாக வாழ்தல், ஆரோக்கிய வாழ்வை பேணுதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி மற்றும் பிரிவின் உறுப்பினர் அஷ்-ஷைக் ஸபருல்லாஹ் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன