திஹாரிய அல்-இக்ரா அகாடமியில் ACJUவின் ‘மஆரிபுல் வஹீ ‘ அல்-குர்ஆன் மத்ரஸா பாடத்திட்டம் வெற்றிகரமாக ஆரம்பம்

2026 மே 29ஆம் திகதி, திஹாரிய அல்-இக்ரா அகாடமியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ‘மஆரிபுல் வஹீ ‘ அல்-குர்ஆன் மத்ரஸா பாடத்திட்டம் வெற்றிகரமாக தொடங்கி வைக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி, ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவினர் குறித்த அகாடமிக்கு நேரடியாக விஜயம் செய்து அல்-குர்ஆன் மத்ரஸா பாடத்திட்டத்தினை அறிமுகம் செய்ததுடன் முஅல்லிமாக்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறிகளையும் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, இக்ரா அகாடமி நிர்வாகம் ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா முறைமையில் இயங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததை அடுத்து இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

தரம் 01 தொடக்கம் 04 வரை கற்கும் அல்-குர்ஆனை சரளமாக ஓதுவதில் தேர்ச்சிபெற்ற சுமார் 130க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்புதிய பாடத்திட்ட வகுப்பில் ஆர்வத்துடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன