2026 மே 16ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலில் அனுராதபுர மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வொன்று அனுராதபுர, முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
அனுராதபுர மாவட்டத்திலுள்ள ஆலிம்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், அரபுக் கல்லூரிகளின் நிர்வாகிகள், கல்விமான்கள் மற்றும் துறை சார்ந்தவர்களை மையப்படுத்தியதாக இந்நிகழ்வு நடைபெற்றது.
ஆரம்பமாக, நிகழ்விற்கு வருகை தந்தோருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பற்றிய அறிமுகத்தினை வழங்கும் முகமாக, ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ.எம்.எம். மபாஹிம் அவர்களால் ஜம்இய்யாவின் கட்டமைப்பு, உப பிரிவுகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் குறித்து விளக்கக் காட்சிகளுடன் தெளிவுகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் அனுராதபுர மாவட்ட ஜம்இய்யாவின் தலைவருமான அஷ்-ஷைக் ஏ. யாஸீம் அவர்கள் இந்நிகழ்வின் நோக்கம் குறித்த தெளிவுரையினை வழங்கினார்.
அதனையடுத்து ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எஸ்.எச்.எம். பழீல் அவர்கள் ‘ஆலிம்கள் மற்றும் நிர்வாகிகளது பொறுப்புக்கள்’ குறித்து உரை நிகழ்த்தியதுடன் சமூகத்தில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வுத் திட்டங்களை கண்டறிவது குறித்தும் வலியுறுத்தினார்.
அடுத்து, நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ‘தஜ்தீத்’ எனப்படும் ஜம்இய்யாவின் புதிய பயணம் குறித்து தெளிவுபடுத்தியதுடன் மாவட்ட மற்றும் பிராந்திய கிளைகள் தலைமை ஜம்இய்யாவுடன் இணைந்து எவ்வாறு அதனை நடைமுறைப்படுத்துவது என்பது பற்றியும் விளக்கினார்.
அதற்கமைய, நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஆலிம்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், அரபுக் கல்லூரிகளின் நிர்வாகிகள், கல்விமான்கள் மற்றும் துறை சார்ந்தவர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இதில் ஜம்இய்யாவின் உப பிரிவுகள் மூலம் எவ்வாறான திட்டங்களை தத்தமது பகுதிகளில் அமுல்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு கருத்துக்களும் பெறப்பட்டன.
இதில், ஜம்இய்யா சார்பில் தலைவர் முஃப்தி, எம்.ஐ.எம். ரிஸ்வி, உப பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எஸ்.எச்.எம். பழீல், அஷ்-ஷைக் ஏ.எம்.எம். மபாஹிம் ஆகியோருடன் ஜம்இய்யாவின் ஆளணியினரான அஷ்-ஷைக் பஸால், அஷ்-ஷைக் அஃலம், அஷ்-ஷைக் பஹத், அஷ்-ஷைக் அன்ஸார் மௌலானா ஆகியோரும் கலந்துகொண்டனர்.







– ACJU Media –


