ACJU அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவினருக்கும் பேருவளை பகுதி அல்-குர்ஆன் மத்ரஸா முஅல்லிம்களுக்கும் இடையே நடைபெற்ற சிநேகபூர்வ சந்திப்பு

2026 மே 19ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவினருக்கும் பேருவளை பகுதி அல்-குர்ஆன் மத்ரஸா முஅல்லிம்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று அஸ்-ஸலாஹிய்யாஹ் அரபுக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

ஜம்இய்யாவின் ‘தஜ்தீத்’ எனப்படும் புதிய போக்கிற்கமைய, அல்-குர்ஆன் மத்ரஸா முறைமையில் புதிய பல திட்டங்களை அறிமுகப்படுத்தி, அவற்றை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வது குறித்து கலந்துரையாடும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, பேருவளை பகுதியில் நடைபெற்று வரும் அல்-குர்ஆன் மத்ரஸாக்களின் நிலை மற்றும் அவை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு எதிர்காலத்தில் அப்பகுதியில் மேலும் புதிதாக அல்-குர்ஆன் மத்ரஸாக்களை தொடங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்தோடு, பேருவளை, மக்கொன மற்றும் தர்கா நகர் பகுதிகளில் இயங்கும் அல்-குர்ஆன் மத்ரஸாக்களை ஒன்றிணைக்கும் வகையில் ஒரு பெரும் நிகழ்ச்சியை விரைவில் ஏற்பாடு செய்வது குறித்து தீர்மானிக்கப்பட்டு நிகழ்விற்கான ஏற்பாட்டுக் குழுவும் நியமிக்கப்பட்டது.

இதில், மேற்குறித்த பகுதிகளில் இயங்கும் அல்-குர்ஆன் மத்ரஸாக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 10 முஅல்லிம்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஜம்இய்யா சார்பில், அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி, அஷ்-ஷைக் அஃலம் மற்றும் அஷ்-ஷைக் பஸால், அஷ்-ஷைக் ரிஸ்வான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன