2026 ஜூன் 03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் மாணவர்களுக் கான ஆளுமை மேம்பாடு மற்றும் கல்வி வழிகாட்டல் நிகழ்வானது புதுக்கடை, செயின்ட் செபஸ்டியன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
சிறந்த கல்வியறிவும் ஒழுக்கமும் ஆளுமையும் மிகுந்த மாணவர் சமுதாயத்தினை கட்டியெழுப்பும் நோக்கில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில், குறித்த பாடசாலையில் கற்கும் சுமார் 80 மாணவர்கள் கலந்துபயன்பெற்றனர்.
இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி வளவாளராக கலந்துகொண்டிருந்தார்.
– ACJU Media –


