2026 மே 09ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மத்திய குழுக்கூட்டம் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் தலைமையில் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களது நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் ஜம்இய்யா கிளைகளின் செயற்பாடுகள், முன்னெடுப்புகள் குறித்து ஆராயப்பட்டதுடன் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதில், மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
இக்கூட்டத்தில், ஜம்இய்யாவின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருடன் உப தலைவர், உப பொதுச் செயலாளர்கள், மத்தியகுழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
– ACJU Media –


