2026 ஜூன் 27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில், ஹட்டன் கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் இளைஞர் பயிற்றுவிப்பாளர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு ஹட்டன் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
குறித்த செயலமர்வில், இளைஞர்களை நெறிப்படுத்துவதன் அவசியம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் அதற்கான திட்டங்கள் மற்றும் அணுகுமுறைகள் தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இதில், ஹட்டன் கிளை ஜம்இய்யாவின் 10க்கும் மேற்பட்ட ஆலிம்கள் கலந்து பயன்பெற்றனர்.
இச்செயலமர்வில், சகோதரர் ரஸ்மி க்ராத்தி வளவாளராக கலந்துகொண்டார்.

– ACJU Media –


