சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள அல்-குர்ஆன் மத்ரஸா அதிபர்கள், முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்களுக்கான விசேட கருத்தரங்கு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலின் கீழ் சாய்ந்தமருது கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள அல்-குர்ஆன் மத்ரஸா அதிபர்கள், முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்களுக்கான விசேட கருத்தரங்கு 2026 ஜூன் 06 அன்று சாய்ந்தமருது ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

‘தஜ்தீத்’ எனப்படும் ஜம்இய்யாவின் புதிய பயணத்திற்கமைய அல்-குர்ஆன் மத்ரஸா முறைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தல்கள் மற்றும் புதிய மாற்றங்களை அதிபர்கள், முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

இதன்போது, முஅல்லிம்களுக்கான நடத்தை விதிகள், கற்பித்தல் முறைமை, வகுப்பறை முகாமைத்துவம், ‘தஜ்தீத்’ முறைமையிலான அல்-குர்ஆன் மத்ரஸா மேலாண்மை, ஜம்இய்யாவின் மத்ரஸா பாடநூல் கற்பித்தல் முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தெளிவான முறையில் விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன், இது குறித்த சந்தேகங்களுக்கும் தெளிவுகள் வழங்கப்பட்டன.

குறித்த கருத்தரங்கில் 65க்கும் மேற்பட்ட முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்கள் கலந்து பயன்பெற்றனர்.

இதில் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி, அஷ்-ஷைக் அஃலம், அஷ்-ஷைக் பஸால், அஷ்-ஷைக் அஸ்வர் அலி ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன