அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவினர் மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள மஸ்ஜிதுகளின் நிர்வாகிகள் இடையே நடைபெற்ற சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவினர் மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள மஸ்ஜிதுகளின் நிர்வாகிகள் இடையில், பிரதேசத்தில் அல்-குர்ஆன் மத்ரஸா திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடுவதற்கான விசேட சந்திப்பொன்று 2026 ஜூன் 06 அன்று ஜம்இய்யாவின் சாய்ந்தமருது கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

ஜம்இய்யாவின் ‘தஜ்தீத்’ எனப்படும் புதிய பயணத்திற்கமைய அல்-குர்ஆன் மத்ரஸா முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பல புதிய திட்டங்கள் மற்றும் மேம்பாடுகள் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்பட்டதுடன் அவற்றை சாய்ந்தமருது பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தும் வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

அத்தோடு சிறுவர்களின் ஆன்மீக ரீதியாக பயிற்றுவிப்பதன் முக்கியத்துவம் மற்றும் அதில் நிலவும் சவால்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதுடன், குறித்த சவால்களை தீர்ப்பதற்கான வழிவகைகளும் முன்வைக்கப்பட்டன.

இச்சந்திப்பில் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள 25க்கும் மேற்பட்ட மஸ்ஜிதுகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இதில், ஜம்இய்யா சார்பில் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி, அஷ்-ஷைக் அஃலம், அஷ்-ஷைக் பஸால் மற்றும் அஷ்-ஷைக் அஸ்வர் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன