அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் சிறந்த பிள்ளை வளர்ப்பு மற்றும் போதை பாவனையின் விபரீதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு, கற்பிட்டி, அம்மாத்தோட்டம் பகுதியில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே சிறந்த பண்பாடுள்ளவர்களாவும், மார்க்க நெறியுள்ளவர்களாகவும் வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் நுட்பங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன் அதிலுள்ள சவால்களை கையாளும் வழிவகைகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும், போதைவஸ்து பாவனையினால் ஏற்படும் உடல், உள மற்றும் சமூக ரீதியிலான பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டதுடன் அவற்றிலிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்கும் வழிவகைகள் குறித்தும் தெளிவூட்டப்பட்டது.
இந்நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்து பயன்பெற்றனர்.
இதில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி க்ராத்தி வளவாளராக கலந்துகொண்டிருந்தார்.

– ACJU Media –


