ACJU வின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவினருக்கும் கொழும்பு மற்றும் வத்தளை பகுதிகளில் இயங்கும் அல்-குர்ஆன் மத்ரஸாக்களின் அதிபர்களுக்கும் இடையில் நடைபெற்ற முக்கிய சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவினருக்கும் கொழும்பு மற்றும் வத்தளை பகுதிகளில் இயங்கும் அல்-குர்ஆன் மத்ரஸாக்களின் அதிபர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு, 2026 ஜூன் 09 அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது, கொழும்பு மற்றும் வத்தளை பகுதிகளில் தற்போது தொடராக நடைபெற்று வரும் அல்-குர்ஆன் மத்ரஸா வகுப்புகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், 05 மற்றும் 08 ஆம் வகுப்புகளை முடித்துவிட்டு அல்-குர்ஆன் மத்ரஸாக்களில் இருந்து வெளியேறிய மாணவர்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மேற்படி விடயங்கள் குறித்த தரவுகள் முன்வைக்கப்பட்டு மீளாய்வும் செய்யப்பட்டது.

குறித்த சந்திப்பில், கொழும்பு மற்றும் வத்தளை பகுதிகளில் இயங்கும் 10 அல்-குர்ஆன் மத்ரஸாக்களின் அதிபர்கள் கலந்துகொண்டனர்.

இதில், ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி மற்றும் அஷ்-ஷைக் அஃலம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன