அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் கற்பிட்டி கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில், கற்பிட்டி-பாத்திமா மகளிர் அரபுக் கல்லூரியில் கற்கும் மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு 2026 ஜூன் 14 அன்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில், சமுதாய முன்னேற்றத்தில் பெண்களின் வகிபாகம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன், பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான சில முக்கிய வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன. மேலும், சமுதாயத்தில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான சில பொறிமுறைகளும் எடுத்துரைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், குறித்த கல்லூரியில் கற்கும் மாணவிகள் மற்றும் கற்பிக்கும் முஅல்லிமாக்கள் என சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து பயன்பெற்றனர்.
குறித்த நிகழ்வில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி வளவாளராக கலந்துகொண்டு விடயங்களை தெளிவுபடுத்தினார்.
– ACJU Media –


