அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் மாவனெல்ல கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் ‘சிறந்த பிரஜையாக வாழ்தல்’ எனும் தொனிப்பொருளில் பெற்றோர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வொன்று 2026 ஜூன் 19 அன்று கனேதென்ன, அல்-மதீனா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள வகையில் ஒழுக்கமும் பண்பாடும் மிகுந்த ஒரு சிறந்த எதிர்கால சமூகத்தை கட்டியெழுப்புவதில் பெற்றோர்களின் வகிபங்கு குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் பிள்ளை வளர்ப்பின் நுணுக்கங்கள் மற்றும் அதிலுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கான வழிவகைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து பயன்பெற்றனர்.
இதில் வளவாளராக, ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஆளணியினரான சகோதரர் ரம்ஸி க்ராத்தி மற்றும் அஷ்-ஷைக் நுஸ்ரத் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டிருந்தனர்.
– ACJU Media –


