கனேதென்ன ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்ற ‘மஸ்ஜிதுகளூடாக இளைஞர்களை மேம்படுத்தல்’ எனும் திட்டம் குறித்த தெளிவூட்டல் நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் மாவனெல்ல கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் ‘சிறந்த பிரஜைகளை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளில் மஸ்ஜித் நிர்வாகங்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வொன்று 2026 ஜூன் 19 அன்று கனேதென்ன ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில், ‘மஸ்ஜிதுகளூடாக இளைஞர்களை மேம்படுத்தல்’ எனும் திட்டம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் அதனை ஒவ்வொரு மஸ்ஜித் நிர்வாகங்களும் தத்தமது பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

இதில், மாவனெல்ல பகுதியிலுள்ள மஸ்ஜிதுகளின் நிர்வாகிகள் பலர் கலந்து பயன்பெற்றனர்.

இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஆளணியினரான சகோதரர் ரம்ஸி க்ராத்தி மற்றும் அஷ்-ஷைக் நுஸ்ரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன