அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவின் செயற்குழுக் கூட்டம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவின் செயற்குழுக் கூட்டம் அப்பிரிவின் தவிசாளர் அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக் அவர்களது தலைமையில், 2026 ஆகஸ்ட் 07அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது, அரபுக் கல்லூரிகள் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.

குறிப்பாக, அரபுக் கல்லூரிகளை நிர்வாக முறைமைக்கான ஜம்இய்யாவினால் தயாரிக்கப்பட்ட கையேடு மற்றும் இறுதி வருட மாணவர்களுக்கான பொதுப் பரீட்சை உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக கவனம் செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், ஜம்இய்யாவின் அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவின் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன