2025 டிசம்பர் 16ஆம் திகதி, களுத்துறை மாவட்டம்-தர்கா நகர் கிளை ஜம்இய்யாவின் ஒருங்கிணைப்பில் தர்கா நகர் பகுதி மஸ்ஜித் நிர்வாகங்கள், பிரதேச மக்கள், பொது அமைப்புகள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரது முயற்சியினால் அனர்த்த நிவாரண உதவிக்காக சேகரிக்கப்பட்ட சுமார் 03 மில்லியன் ரூபா நிதி (3,000,000/=) ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.
களுத்துறை மாவட்ட ஜம்இய்யாவின் வழிகாட்டலுக்கிணங்க இந்நிதி சேகரிக்கப்பட்டதுடன் குறித்த நிதியினை தர்கா நகர் கிளை ஜம்இய்யாவின் உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மஸ்ஜிதுகளின் நிர்வாகிகள் ஜம்இய்யாவிடம் கையளித்தனர்.
இதில், ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், தர்கா நகர் கிளை ஜம்இய்யாவின் உறுப்பினர்கள், தர்கா நகர் பகுதி மஸ்ஜித் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.



– ACJU Media –



