25 டிசம்பர் 11 ஆம் திகதி, களுத்துறை மாவட்ட அட்டுலுகம கிளை ஜம்இய்யா மற்றும் அட்டுலுகம ஜுமுஆ மஸ்ஜித் நிர்வாகம் ஆகியவற்றின் முயற்சியினால் அனர்த்த நிவாரண உதவிக்காக சேகரிக்கப்பட்ட சுமார் 02 மில்லியன் ரூபா நிதி ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.
2025 டிசம்பர் மாதத்திற்கான ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் போதே களுத்துறை மாவட்ட ஜம்இய்யா, அட்டுலுகம கிளை ஜம்இய்யா மற்றும் அட்டுலுகம ஜுமுஆ மஸ்ஜித் ஆகியவற்றின் நிர்வாகிகளினால் குறித்த நிதி கையளிக்கப்பட்டது.
இதில் ஜம்இய்யா சார்பில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், உப தலைவர்கள், உப செயலாளர்கள் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



– ACJU Media –


