மன்னார் மாவட்டத்தை மையப்படுத்தி நடைபெற்ற பிறை தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்குகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவின் தவிசாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் மற்றும் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.எம்.எம். மபாஹிம் ஆகியோரது நெறிப்படுத்தலில், மன்னார் மாவட்டக் கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில், பிறை தொடர்பான மார்க்க வழிகாட்டல்களை மக்களிடையே தெளிவுபடுத்தும் நோக்கிலான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் 2026 ஜூலை 11 அன்று மன்னார் மாவட்டத்தை மையப்படுத்தி நடைபெற்றன.

பிறை தொடர்பான இஸ்லாமிய வழிகாட்டல்களை தெளிவுபடுத்துதல், பிறையை உறுதிப்படுத்துவதிலுள்ள தவறான புரிதல்களை நீக்குதல், ஜம்இய்யாவின் பிறை தொடர்பான நிலைப்பாடுகளை விளக்குதல், ஆலிம்கள், மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒற்றுமையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இக்கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

இவற்றில், ஜம்இய்யாவின் முசலி, மன்னார் நகர், நானாட்டான், மாந்தை ஆகிய பிரதேசக் கிளைகளைச் சேர்ந்த ஆலிம்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், சமூக முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டதுடன், எருக்கலம்பிட்டி ஸயீதிய்யா அரபுக் கல்லூரி மற்றும் புதுக்குடியிருப்பு ஸலாமிய்யா அரபுக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்கும் மேல்வகுப்பு மாணவர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

குறித்த கருத்தரங்குகளில் வளவாளராக அஷ்-ஷைக் முஹம்மத் ஹாஷிமி அவர்கள் கலந்துகொண்டு பிறை தொடர்பான மார்க்க வழிகாட்டல்களையும், ஜம்இய்யாவின் பிறைக் குழுவின் நிலைப்பாடுகளையும் விளக்கினார்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன