கோனவெல, மஸ்ஜிதுஸ் ஸலாம் ஜுமுஆ பள்ளிவாயலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்கள் தொழுகையறைக்கான கிப்லா திசை உறுதிப்படுத்தப்பட்டது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவினால், களனி, கோனவெல மஸ்ஜிதுஸ் ஸலாம் ஜுமுஆ பள்ளிவாயலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்கள் தொழுகையறைக்கான கிப்லா திசையானது 2026 ஆகஸ்ட் 06 அன்று உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த பள்ளிவாயல் நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய இச்செயற்பாடானது மேற்கொள்ளப்பட்டதுடன் துல்லியமான முறையில் அளவிடப்பட்டு கிப்லா திசை உறுதிசெய்யப்பட்டது.

இதில், ஜம்இய்யாவின் பிறைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத் ஹாஷிமி அவர்கள் கலந்துகொண்டு திசையினை உறுதிப்படுத்தும் பணியினை மேற்கொண்டார்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன