இரத்தினபுரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான ஆன்மீக மற்றும் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரத்தினபுரி நகரக் கிளையின் ஏற்பாட்டில், இ /அல்-மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்கும் மாணவர்களுக்கான ஆன்மீக மற்றும் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி 2026 ஆகஸ்ட் 07 அன்று நடைபெற்றது.

மாணவர்களுக்கு ஆன்மீக ரீதியான ஈடுபாட்டை மேம்படுத்துவதுடன் ஒழுக்க விழுமியங்கள் மற்றும் கல்விசார் முன்னேற்றத்திற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கும் நோக்கினடிப்படையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, கல்வி, ஒழுக்கம் மற்றும் எதிர்கால இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு விரிவான முறையில் விளக்கமளிக்கப்பட்டதுடன், பயனுள்ள ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

இதில், ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ.எச்.எம். அக்ரம், பொது முகாமையாளர் சகோதரர் எஸ். ஜவாஹிர் சாலி மற்றும் சகோதரர் ரம்ஸி கிராத்தி ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு பயனுள்ள பல கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன