2026 மார்ச் 02ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் இளைஞர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு மெகொட கொலன்னாவ, மஸ்ஜிதுன் நூரானிய்யாஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதில், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களிடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் சிறந்த முன்மாதிரி மிக்க சமூகமாக திகழ்வதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
இதில், மஸ்ஜிதுன் நூரானிய்யாஹ் மஹல்லாவிற்குட்பட்ட 90க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து பயன்பெற்றனர்.
இந்நிகழ்வில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.

– ACJU Media –

