2026 மார்ச் 02ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தஃவா பிரிவு மற்றும் இளைஞர் விவகாரப் பிரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், கொழும்பு வடக்கு கிளை ஜம்இய்யாவிற்குட்பட்ட மஸ்ஜித் இமாம்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வொன்று மட்டக்குளிய, ஹம்ஸா ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
ஜம்இய்யாவின் தஃவா பிரிவு மற்றும் இளைஞர் விவகாரப் பிரிவு ஆகியன தொடர்பில் மஸ்ஜித் இமாம்களுக்கு அறிமுகத்தை வழங்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில், மஹல்லாவாசிகளை வலுவூட்டுவதில் மஸ்ஜித் இமாம்களின் முக்கிய பங்கு எனும் தலைப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து தெளிவுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், ஜம்இய்யாவின் கொழும்பு வடக்கு கிளைக்குட்பட்ட 20க்கும் மேற்பட்ட மஸ்ஜித் இமாம்கள் கலந்து பயன்பெற்றனர்.
இதில், ஜம்இய்யாவின் தஃவா பிரிவின் துணை செயலாளர் அஷ்-ஷைக் ஏ.எச்.எம். அக்ரம் மற்றும் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான், இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.



– ACJU Media –



