ACJU/NGS/2026/100
2026.08.06 (1448.02.21)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அம்பாறை மாவட்ட மற்றும் சம்மாந்துறை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளராகவும் ஃபத்வா குழு உறுப்பினராகவும் பணியாற்றிய அஷ்-ஷைக் ஹஜ்ஜு முகம்மது (اللهم اغفرله وارحمه) அவர்களின் மரணச் செய்தி எம்மை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னாள் தலைவர் மர்ஹூம் அஷ்-ஷைக் ஐ.எல்.எம். அலியார் அவர்களின் மூத்த மருமகன் ஆவார்.
மர்ஹூம் அஷ்-ஷைக் ஹஜ்ஜு முஹம்மது அவர்கள் இஸ்லாமியக் கல்வி, தஃவா மற்றும் சமூகப் பணித்துறைகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுடன், பல தலைமுறைகளின் மார்க்கக் கல்வி வளர்ச்சிக்கு பெறுமதிமிக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக சம்மாந்துறைப் பிரதேசத்தில் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உலமாக்களை உருவாக்கும் பணிக்கும் அவர் ஆற்றிய சேவைகள் என்றும் நினைவுகூரப்படத்தக்கவையாகும்.
அவரது மறைவு ஒரு பேரிழப்பாகும். இந்நேரத்தில் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
அல்லாஹ் தஆலா அவர்கள் இருவருடைய பாவங்களை மன்னித்து, இருவருக்கும் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த சுவனத்தை அருள்வானாக!
அவர்களது குடும்பத்தினருக்கு இந்த இழப்பைத் தாங்கும் பொறுமையையும் மன ஆறுதலையும் வழங்குவானாக!
أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله
(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே! அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே! எம்மையும் அவரையும் மன்னித்தருள்வாயாக!)
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


