அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரத்தினபுரி நகர் கிளையின் ஏற்பாட்டில் கிளை வலுவூட்டல் மற்றும் பிரதேசத்திலுள்ள மூத்த ஆலிம்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வு 2026 ஆகஸ்ட் 07அன்று இரத்தினபுரி அல்-ஜன்னத் மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதன்போது, ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களால் கிளையின் செயற்பாடுகள் மற்றும் பணிகளை மேலும் வீரியப்படுத்துவதற்கான முக்கிய சில வழிகாட்டல்கள் வழங்கப்பட்டதுடன், சமூகம் சார் வேலைத்திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான சில ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, இரத்தினபுரி நகர் பகுதியில் சமூக மற்றும் மார்க்கப் பணிகளில் அர்ப்பணிப்போடு செயற்பட்ட மூத்த ஆலிம்கள் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, அவர்களது உயரிய சேவைகளுக்காக பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இக்கருத்தரங்கில், ஜம்இய்யாவின் பதில் தலைவர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான்,பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உப தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன் மற்றும் உப பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் மற்றும் அஷ்-ஷைக் ஏ.எச்.எம். அக்ரம் ஆகியோர் கலந்துகொண்டு கலந்துகொண்டு மூத்த ஆலிம்களுக்கான நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தனர்.



– ACJU Media –


