அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவினர், 2026 ஆகஸ்ட் 10 அன்று, ராகம பகுதியில் இயங்கிவரும் அல்-குர்ஆன் மத்ரஸாவிற்கு விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டதுடன் முஅல்லிம்கள், முஅல்லிமாக்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
இதன்போது, குறித்த மத்ரஸாவின் நிறைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் மத்ரஸா மேம்பாடு, கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் மாணவர்களது முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு, ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பாடத்திட்டம் மற்றும் முஅல்லிம்கள் முஅல்லிமாக்களுக்கான பயிற்சிநெறிகள் தொடர்பாகவும் தெளிவுகள் வழங்கப்பட்டன.
இதில், அஷ்-ஷைக் அஃலம், அஷ்-ஷைக் பஸால் மற்றும் அஷ்-ஷைக் நுஃமான் ஆகியோர் கலந்துகொண்டு மேற்படி விடயங்கள் குறித்து தெளிவுகளை வழங்கினர்.


– ACJU Media –


