க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவடையும் வரை ஜுமுஆ குத்பாவையும் தொழுகையையும் பிற்பகல் ஒரு மணிக்குள் (1.00 PM) நிறைவு செய்து கொள்ளுங்கள்!

ACJU/NGS/2026/103
2026.08.13 (1448.02.28)

2026ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2026.08.10ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.

நேர அட்டவணையின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை ஜுமுஆவுக்குப் பிறகும் பரீட்சைகள் நடைபெறவிருப்பதனால் மாணவர்களது நலன் கருதி ஜுமுஆ பிரசங்கம் மற்றும் தொழுகையினை பிற்பகல் 1.00 மணிக்கு முன்னர் முடிவுறும் வகையில் அமைத்துக் கொள்ளுமாறும் பரீட்சை முடிவடையும் வரை இதனை நடைமுறைப்படுத்துமாறும் சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினயமாக கேட்டுக்கொள்கிறது.

– ACJU Media –

 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன