உயர்தரப் பரீட்சை முடிவடையும் வரை ஜுமுஆக்களை சுருக்கிக் கொள்வோம்

 ACJU/NGS/2022/031

2022.02.09 (1443.07.07)

தற்போது கல்வி பொதுத் தராதரப் பத்திர (உயர்தர) பரீட்சை (G.C.E. A/L) நடைபெற்று வருகின்றது. இதில் பங்கு கொள்ளும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சிறந்த பெறுபேறுகளை பெற பிரார்த்திக்கின்றது.

குறித்த பரீட்சையில் கலந்து கொள்ளும் முஸ்லிம் மாணவர்களும், பரீட்சை கடமைகளில் ஈடுபடும் முஸ்லிம் ஆசிரியர்களும் ஜுமுஆ தொழுகையில் கலந்து கொள்வதால் பரீட்சை முடிவுறும் வரை வெள்ளிக்கிழமை ஜுமுஆ குத்பாக்களை சுருக்கிக் கொண்டு குத்பாவையும் தொழுகையையும் பிற்பகல் 12.55 மணிக்கு முன்னர் முடித்துக் கொள்ளுமாறு சகல கதீப்மார்களையும் இமாம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

வஸ்ஸலாம்

 
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 
 
 
 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன