அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழுவினால் தர்கா நகர் அல்-ஹம்ரா மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட ‘சிறந்த பிரஜைகளை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளிலான வழிகாட்டல் செயலமர்வு

2024.10.17ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழுவினால் தர்கா நகர் அல்-ஹம்ரா மகா வித்தியாலயத்தின் க.பொ.த சாதாரணதரத்தில் கற்கும் மாணவர்களை மையப்படுத்திய ‘சிறந்த பிரஜைகளை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளிலான வழிகாட்டல் செயலமர்வு தர்கா நகர் மீரா ஜுமுஆ மஸ்ஜிதில் நடாத்தப்பட்டது.

தர்கா நகர் அல்-ஹம்ரா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட குறித்த நிகழ்வில் 58க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து பயன்பெற்றனர்.

குறித்த செயலமர்வில் மஸ்ஜிதில் இஃதிகாப் இருத்தல், இரவு வணக்கத்தை வழக்கமாக்குதல், மண்ணறைகளை தரிசித்தல் போன்ற உள்ளத்தை பக்குவப்படுத்தும் ஆன்மீக செயற்பாடுகள் தொடர்பில் மாணவர்களுக்கு தெளிவுகள் வழங்கப்பட்டதோடு செயன்முறையாகவும் செய்துபார்க்கப்பட்டது.

அத்தோடு தலைமைத்துவப் பயிற்சி, உடலை வளப்படுத்துவதற்கான உடற்பயிற்சி மற்றும் வெளிக்கள செயற்பாடுகளும் இதன்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக்குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் நவ்பர் (ஹக்கானி) மற்றும் குழுவின் உறுப்பினர் அஷ்-ஷைக் ஸபருல்லாஹ் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டிருந்தனர்.

 

 

– ACJU Media –

Related Posts

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பில் ஜம்இய்யா தடையாக உள்ளது என தெரிவித்தமையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன