அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு மற்றும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யா நிர்வாகிகள் ஆகியோரிடையே இடம்பெற்ற விஷேட ஒன்றுகூடல்

2024.07.02ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா-புத்தளம் மாவட்டக்கிளை நிர்வாகிகள் ஆகியோரிடையிலான விஷேட ஒன்றுகூடலொன்று ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஜம்இய்யாவின் இலக்கு, பணிக்கூற்று மற்றும் யாப்பினை அடிப்படையாகக்கொண்டு புத்தளம் மாவட்டத்தில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய விதத்தில் ஜம்இய்யாவின் சமய, சமூகப்பணிகளை வீரியமாக முன்னெடுத்துச்செல்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதோடு அம்மாவட்டத்தில் மேலும் பிராந்தியக் கிளைகளை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி. ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர், உப தலைவர்களான அஷ்-ஷைக் எச். உமர்தீன் மற்றும் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிலா, உப செயலாளர் அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாஸில் ஹுமைதி, பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், ஆலிம்கள் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், ஆய்வு மற்றும் வெளியீட்டுக்குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.டி.எம். ளரீஃப், ஊடகக்குழுவின் துணைச்செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், அரபிக்கல்லூரிகளுக்கான குழுவின் துணைச்செயலாளர் அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

– ACJU Media –

 
 
 
 

Related Posts

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பில் ஜம்இய்யா தடையாக உள்ளது என தெரிவித்தமையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன