அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் நடைபெற்ற அரபுக் கல்லூரிகளுக்கான குழுவின் குழுக் கூட்டம்

2023.11.14 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அரபுக் கல்லூரிகளுக்கான குழுவின் குழுக் கூட்டம் அதன் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.எச்.எம். ஜஃபர் அவர்களின் தலைமையில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் வழிகாட்டலில் தலைமையகத்தில் நடைபெற்றது.

அரபுக் கல்லூரிகளை மேம்படுத்தல் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் முன்மாதிரிமிக்க அரபுக் கல்லூரிகளை உருவாக்குவதன் ஓர் அங்கமாக நாடளாவிய ரீதியில் அரபு மத்ரஸாக்களில் கடமையாற்றுகின்ற அதிபர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கான முகாமைத்துவ பயிற்சி நெறிகளை நடாத்துவது தொடர்பாக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் ஜம்இய்யாவின் அரபுக் கல்லூரிகளுக்கான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.எச்.எம். ஜஃபர், உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.என்.எம். ஸைபுல்லாஹ், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஆஸாத் அப்துல் முஈத் உட்பட குழு உறுப்பினர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

 

 

-ACJU Media-

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன