2026 ஜூன் 02ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவினால் பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆளுமை மேம்பாடு நிகழ்ச்சித் தொடரினை ஆரம்பிப்பது தொடர்பான திட்டமிடல் கூட்டம் மல்வானை, வடுவேகம அல்-முஸ்தபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
சமூகத்திற்குப் பயனுள்ள சிறந்த எதிர்கால சமூகத்தினை கட்டியெழுப்பும் நோக்கில் இத்தொடர் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் மாணவர்களுக்கான திறன் மேம்பாடு, பெற்றோர்களுக்கான பிள்ளை வளர்ப்பு நுணுக்கங்கள், ஆசிரியர்களுக்கான வலுவூட்டல் என வெவ்வேறாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதனையடுத்து குறித்த பாடசாலையில் கற்கும் தரம் 06, 07, 08 வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுடனான திறந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது விசேட கவனம் தேவையுடைய மாணவர்கள் இனங்காணப்பட்டதுடன் அவர்களுக்கான மேம்படுத்தல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இதில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி வளவாளராக கலந்துகொண்டிருந்தார்.
– ACJU Media –


