உலக பெளத்த இளைஞர்கள் சங்க பொதுச் செயலாளர் முகுன்வெல அனுருத்த நாயக்க தேரர் மற்றும் மதங்களுக்கான ஐக்கிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஜம்இய்யாவுக்கு வருகை

2023.10.20ஆம் திகதி அகில இலங்கை சாசனாரக்ஷன நிலையம், உலக பெளத்த இளைஞர்கள் சங்கம் ஆகியவற்றின் பொதுச் செயலாளர் முகுன்வெல அனுருத்த நாயக்க தேரர் மற்றும் மதங்களுக்கான ஐக்கிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைக் காரியாலயத்திற்கு சினேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பில் இலங்கையில் வாழும் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றின் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டன.

மதத்தலைவர்கள் மத்தியிலும் புரிந்துணர்வும் ஒற்றுமையும் பேணப்படவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் குறித்த சந்திப்பின்போது நீண்ட கலந்துரையால்கள் இடம்பெற்றன.

நடைபெற்ற இந்த சந்திப்பில் ஜம்இய்யா சார்பாக பதில் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக், பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான் மற்றும் சமூக சேவைப்பிரிவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன