ஜம்இய்யாவின் பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவினால் நடாத்தப்பட்ட பொலன்னறுவை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆலிம்களுக்கான வலுவூட்டல் செயலமர்வு

2024.09.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவினால் பொலன்னறுவை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை மையப்படுத்திய ஆலிம்களுக்கான வலுவூட்டல் செயலமர்வொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

குறித்த செயலமர்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரங்கள், இளைஞர் விவகாரங்கள், ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயற்றிட்டங்கள், அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரங்கள் ஆகிய முக்கிய நான்கு அம்சங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதோடு, குறித்த துறைகளில் தமது திறன்களை மேம்படுத்துவதற்காக கலந்துகொண்ட ஆலிம்களை ஆறு மாதங்களைக் கொண்ட வடிவமைக்கப்பட்ட ஒரு பயிற்சி நெறிக்குள் உள்வாங்குவது தொடர்பிலும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கியதோடு வருகை தந்திருந்த ஆலிம்களுக்கு சில முக்கிய ஆலோசனைகளையும் முன்வைத்தார்கள்.

குறித்த செயலமர்வில் வளவாளர்களாக ஜம்இய்யாவின் பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் திட்ட ஆலோசகர் சகோதரர் நபீஸ் எம். நிஸாம், குழுவின் தலைமை அதிகாரி அஷ்-ஷைக் அர்ஷத் அதாஉர் ரஹ்மான், இளைஞர் விவகாரக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத், அல்-குர்ஆன் மத்ரஸா குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான், இளைஞர் விவகாரக் குழுவின் துணை இணைப்பாளர் சகோதரர் ரம்ஸி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

– ACJU Media –

 
 
 
 

Related Posts

தித்வாப் புயலால் ஏற்பட்ட கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் மரணித்து அடக்கம் செய்யப்பட்டோருக்காக மறைவான ஜனாஸா தொழுகை நிறைவேற்ற விரும்பவோர், அதனை தொழுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன