முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரமுகர்கள் சந்திப்பு

2023.11.15 ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

நாடு, சமூகம் என்ற ரீதியில் ஜம்இய்யாவின் கடந்தகால பணிகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் குறித்த சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பணிகளில் எவ்வாறு இருதரப்பும் இணைந்து, புரிந்துணர்வோடு செயலாற்றுவது என்பது தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இச்சந்திப்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சார்பாக பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைஸல், பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட், சட்ட உத்தியோகத்தர் செல்வி. எம்.ஜே.எப். சுரைய்யா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம். ரொஷான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஜம்இய்யா சார்பில் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் மற்றும் ஃபத்வா குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் ஆகியோருடன் ஜம்இய்யாவின் உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 

 

-ACJU Media-

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன